தொட்டும் தொடராமல் தொங்கிக் கொண்டிருந்த த்ரிஷா-விஜய் நட்பு, படீரென்று அறுந்து விட்டதாம். பழம் நழுவி பாலில் விழலாம். பழம் அழுகி வாயில் விழலாமா? அடுத்தடுத்த படங்களில் ஜோடி சேர்ந்ததாலேயே ‘அட போங்கப்பா’ என்று அலுத்துப் கொண்டார்கள் ரசிகர்கள். இதை உணர்ந்துதான் தனது குருவி படத்தில் ‘த்ரிஷா வேண்டாம்’ என்றார் விஜய். ஆனாலும், கொல்லைபுற வழியாக வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்தார் த்ரிஷா! நயன்தாராவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்த போதும், அதை ஓவர்டேக் செய்தார்.
வேண்டா வெறுப்பாக ஜோடி சேர்ந்தார் விஜய், மறுபடியும்! ஆனாலும், அவர் நினைத்ததுதான் நடந்தது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய குருவி இளைய தளபதிக்கு வெற்றியை தரவில்லை. மன்றக் கொடி அறிமுக விழாவில், தரணியை கில்லி பட இயக்குனர் என்றுதான் மேடைக்கு அழைத்தார்கள். பேசிய அனைவருமே வலுக்கட்டாயமாக குருவி பெயரை உச்சரிக்க மறந்தார்கள். இப்படி ஜோடி சென்ட்டிமென்ட்டில் வாடிப் போன விஜய் செய்த முதல் காரியம், த்ரிஷாவுடனான நட்பை துண்டித்துக் கொண்டதுதான்.
கடந்த வாரம் நடந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு த்ரிஷாவுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம் விஜய். கடைசி வரை தன்னை அழைப்பார் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. கண்ணீரும் கம்பலையுமாக அம்மாவிடம் அழுது வைக்க, விஜய் செல்லுக்கு தொடர்பு கொள்ள முயன்றாராம் அம்மா. இப்படியெல்லாம் நடக்கும் என்றே செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த விஜய், பிறந்த நாளை கலகலப்பாக கொண்டாடினார். த்ரி இடத்தில் நயன் இருந்து நடத்தி வைத்ததுதான் விசேஷம்!