மீண்டும் கலக்க வரும் விஜய் - த்ரிஷா ஜோடி
எந்த கிசுகிசுவிலும் பெரிய அளவில் சிக்காமல் இருந்த விஜய், த்ரிஷாவோடு நடிக்கத் தொடங்கிய பிறகு கிசுகிசுக்களுக்கு ஆளானார். "கில்லி" படத்தின் வெற்றிவிழாவை த்ரிஷாவும் விஜய்யும் சேர்ந்து பார்க் ஷெரட்டன் ஒட்டலில் பிரம்மாண்டமாக கொண்டாடிய போது அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த நெருக்கம் வெளியே தெரிய வந்தது. போதாக் குறைக்கு ஒருநாள் நள்ளிரவில் விஜய்யை தேடி போன இடத்தில் போலீசாரிடம் சிக்கி பலத்த சர்ச்சையை உண்டாக்கினார் த்ரிஷா.

இப்படி சர்ச்சை கிளம்பியதும் இருவரும் தொடர்புகளை குறைத்துக் கொண்டாலும் கூட அவ்வப்போது செல்போன்

மூலம் பேசிக்கொண்டு தொடர்பை வளர்த்துக் கொண்டிருந்தனர். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே அஸினை தனக்கு ஜோடியாக ரெகமண்ட் செய்தார் விஜய். இதில் த்ரிஷாவுக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

இந்நிலையில் மீண்டும் விஜய் - த்ரிஷா கூட்டணி களமிறங்குகிறது. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.°à®Ÿà®¾à®²à®¿à®©à®¿à®©à¯ மகன் உதயநிதி தயாரிக்கும் படம் ஒன்றில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவை விஜய் ரெகமண்ட் செய்யவில்லை என்றாலும் தயாரிப்பாளர் உதயநிதி விரும்பியதால் த்ரிஷா கதாநாயகியாகிறார். இதேபோல் உதயநிதி தயாரிக்கும் இன்னொரு படத்தில் அவரது கல்லூரித் தோழர் விஷால் நடிக்கிறார். இந்தப் படத்திலும் த்ரிஷாவையே கதாநாயகியாக்க விஷால் ரெகமண்ட் செய்கிறார்.

தெலுங்கில் பிஸியானதால் தமிழ் பீல்டில் இருந்து தெலுங்குக்குப் படையெடுத்த த்ரிஷா, அங்கே 1 கோடி சம்பளம் என்பதால் தெலுங்கிலேயே கவனம் செலுத்தினார். த்ரிஷா சுடிதார், த்ரிஷா செப்பல் என ஆந்திராவே த்ரிஷாவை உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

இந்நிலையில் நயன்தாரா என்ட்ரி ஆகி இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். அதேசமயம் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட மகேஷ் - த்ரிஷா ஜோடியின் "சைனிகுடு" படம் அட்டர்பிளாப் ஆக... மீண்டும் தன் கவனத்தை தமிழ் மீது திருப்பியிருக்கிறார் த்ரிஷா.

அஜீத்தின் "கிரீடம்", விஜய் படம் என மீண்டும் தனது நாற்காலியை கைப்பற்ற பம்பரமாய் சுழல்கிறார் த்ரிஷா.

இதற்கு மத்தியில் ஸ்ரீகாந்த் சொந்தமாக தயாரிக்க, சசி இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை கேட்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். 65 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டு அதிர வைத்தாராம் த்ரிஷா.
webulagam